உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

குறிப்பு செய்யுள் 1. இது வளந்தானார் ஆன காடவராயரின் புயத்தை (தோள் வலியைப்) புகழ்கிறது. செய்யுள் 2. இதில் இரண்டாம் அடியில் மதசானை என்றிருப்பது மதயானை என்றிருக்க வேண்டும். வீரசேகர காடவராயன் அதிகமான் நாட்டையும் கூடலையும் அழித்தது சக ஆண்டு 1108 என்று கூறுகிறபடியால் அது நிகழ்ந்தது. கி.பி. 1186- இல் ஆகும். அதிகமான் நாடு என்பது தகடூர் என்னும் தர்மாபுரி. கற்கடக மாராயன் என்பவன் யார் என்பது தெரியவில்லை.

அடையவளைந்தான் வீரர்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், கூடலூர் தாலுகா, திருவேந்தி புரம் (திருவயிந்திபுரம்). தேவநாயகப் பெருமாள் கோவில், மேலைக் கோபுரவாயிலின் இடதுப்புறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு :எண் 771. (No.771. S. I. I. Vol. VII.)

விளக்கம் : தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் அரசனின் படைவீரர் சிறப்பைக் கூறுகிறது இச் செய்யுள். சாசனச் செய்யுள்

அருள்புனை தொண்டையர் கோமா னடைய வளைந்தபிரான் பொருபடை மன்னவர் வீரமொன்றே; பொரும்போர் தொலைந்தும் வருகதிர் முந்து குணதிசை ஆள்வர், வடக்கிருப்பர்

வெருவரு தென் திசை கொள்வர், செல்லாநிற்பர் மேற்றிசைக்கே.

அறவுரை

இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைலில் உள்ள திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள, நாலுமூலைக்கேணி என்னும் மாற்பிடுகு பெருங் கிணற்றுச் சுவரில் உள்ள சாசனம்.