உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

107

“சுழல்விழித் தறுகண்வேழத் தடக்கைபோற்றிரண்ட தோளாய் உழைவிழி யார்சொற்கொண்டா ருறுவர்வெந் துயரமென்னும் பழமொழி யதனை யோர்ந்தும் பாவியேன் சொல்லைக் கேளா உழையின்பின் போன வேந்தே உனக்குற்ற தறிகி லேனே.

66

66

அடலருந் திறலி னாயை வஞ்சித்திட் டஞ்ச வன்னப் பெடையுறு நடையி னாரிற் பெரியபா வஞ்செய் தேனைக் குடிலவாள் அவுணன் கொண்டு போயினா னென்ன ஒன்னா ருடைபுறங் காணல் நாணும் வீரனீ யுறுவ தென்னோ!’

“எனவும் பலவும் புலம்பினள் புலம்பாக்

கோம்பி கண்டு குலுங்குபு கலங்காச்

சாம்பிய மஞ்ஞையிற் சாய்ந்தனள் கிடப்ப வித்யாதரிகள் விரும்பினர் சூழ்ந்து.

99

அசோகவனத்திலே சீதாலக்ஷ்மி தனது விதியை நினைத்தும், இராமனது நிலையை எண்ணியும் வருந்தியதைக் கூறுகின்றன இச்செய்யுள்கள். 3. சங்ககாலத்துப் பாரதம்

மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே மகாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.

இந்தப் பாண்டிய சாசனம் சின்னமனூரில் கிடைத்தபடியால், சின்ன மனூர்ச் சாசனம் எனப்படுகிறது. சின்னமனூர் என்பது மதுரை மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் பெருமாள் கோவிலில் மடைப் பள்ளி கட்டுவதற்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிலத்தைத் தோண்டிய போது, இந்தச் செப்பேட்டுச் சாசனங்கள் கிடைத்தன. இவை பெரிய செப்பேடு, சின்ன செப்பேடு என இருவகைப்படும். இந்தச் சாசனங்கள் இப்போது சென்னை அரசாங்கக் காட்சிசாலையில் உள்ளன. இச்சாசனங்கள் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. சின்னமனூர் பெரிய செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில், பழைய பாண்டியரைப் பற்றிக் கூறும் பகுதியில், பாண்டியர் தமிழ்ச் சங்கம் வைத்தலும், அச்சங்கத்தில் மகாபாரதத்தைத் தமிழில் எழுதியதும் ஆகிய செய்தியும் கூறப் படுகிறது. அந்தப் பகுதி வருமாறு:

66

---

---

பாக ஸாஸநனாரம் வவ்வியும் செம்மணிப் பூணொடு தோன்றித் தென்றமிழின் கரைகண்டும் வெம்முனை வேலொன்று விட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும்