உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

109

5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதப்படுகிறார். இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைச்சங்ககாலத்துப் புலவர்கள் இயற்றிய செய்யுள்களைத் தொகுத்த காலத்தில் இருந்தவராதல் வேண்டும். ஏனென்றால், இவர் அகநானூறு, புறநானூறு நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு முதலிய தொகைநூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய பாரதம் மறைந்து

விட்டது.2

2

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய (புறத் திணையியல், 17ஆம் சூத்திரம்) உரையில், பாரதச் செய்யுள்கள் சில வற்றை மேற்கோள் காட்டுகிறார், இச்செய்யுள் அகவற்பாக்களா லானவை. இச் செய்யுள்களை இயற்றியவர் பெயரையே நச்சினார்க் கினியர் குறிப்பிடவில்லை. ஆனால், இவை, பாரதம் பாடிய பெருந் தேவனார் (சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார்) இயற்றியதாக இருக்கக்கூடும் என்று தோன்றுகின்றன. நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுகிற பாரதச் செய்யுள்கள்

இவை:

ஆதி சான்ற மேதகு வேட்கையின்

நாளுங் கோளு மயங்கிய ஞாட்பின் மதியமு ஞாயிறும் பொருவன போல

வொருத்தி வேட்கையி னுடன்வயிற் றிருவர்

செருக்கூர் தண்டி நெருக்கின ரெனவு

மரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா

ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந் தும்பியபடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு கொடிகொடி பிணங்கி வீழ்வன போல வொருவையின் வீழ்ந்தடு காலை

யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே.

1