உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

“அற்றன் றாத லதுதா னறஞ்செய்தல்

சொற்றன் மாட்டு நிகழ்த்தல்பின் னோர்த்தல் மற்றித் தன்மைப் படுமாயின் மாண்பிலார்க் குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார். நிலைபெற வெல்லாரு நீத்தனக ளைந்தெனவுந் தலைவரு மிழுக்கெனத் தவிர்ந்தனவு மேனா ணிலைபெற வெல்லாரு நீத்தனயா வென்றான் கொலைகளவு கட்காமம் பொய்யெனாக் கூறினாள். சென்றிறந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக டுன்றினன் பிறக்கன்ன னாயினன் மாமேருக் குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ. இன்பஞ்சால் பெரும்பார மீரைந்து முடனிறைத்து நன்கென நிலைபெற்ற நாதன்.

1

2

3

4

நலங்கிள ரொழுக்கந்தா னண்ணிய காலத்துக் கலங்குதற்குத் தக்கன கண்டன வுளவெனினுந் துலங்காது நிற்குந்தன் றுணிவுடைமை காணுங்கா னிலம்பூனை யாயொழியு நிறையினா னல்லனோ.

5

சென்றெய்து மவத்தையோ சிலவற்றாற் றரப்படுமோ வன்றியு மன்பொருள்தோ றவ்வத் தன்மையோ.

6

00

நின்றதூஉந் திரிந்ததூஉ மன்றாயி னிகழ்வில்லை

யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ. 7

அளவிலாக் கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங் களையருந் துன்பத்துக் கற்பநூ றாயிரமும்

விளைவாய போதியை யுறுமளவும் வினைமடியான் தளர்வின்றி யோடிய தாளினா னல்லனோ.

நிலம்வலிது நீர்துவளும் தீத்தெறூஉங் காற்றுளரும் புலமாமா றிதுபொருள் வரையறுக்கு மாகாச நிலமாண்ட நாற்பூதஞ் சார்வாக வுவாதாக்கள்

சொலமாண்ட வியற்கைதா னிறமுதலாச் சொலற்பாற்றே.

9