உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

131

பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட

தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன் விண்ணா றியங்கும் விறலவ ராயினுங்

கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.

2

(சிலம்பு, கனாத்திறம், 14ஆம் அடி, உரைமேற்கோள்.)

அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற்

கன்றின் குரலுங் கறவை மணிகறங்கக் கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலு

மொன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும்.

3

(சிலம்பு, ஆய்ச்சியர், 3ஆம் அடி, உரைமேற்கோள்.) யாப்பருங்கல உரையாசிரியர், கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்:

66

"நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து

கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலுங் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே. வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேற் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.

8. புராண சாகரம்

1

2

(93ஆம் சூத்திர உரை மேற்கோள்)

யாப்பருங்கல விருத்தியுரையினால், இப்பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. “இன்னும் பலவடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராணசாகரமும் முதலாக வுடைய செய்யுள்களிற் கண்டுகொள்க” என்று விருத்தியுரைகாரர் எழுதுகிறார்.

(யாப்பருங்கலம், செய்யுளியல், 9ஆம் சூத்திர உரை.)