உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-15

இவ்வாறு கூறுவதனால், ஓவியக்கலை பற்றிய ஓவியநூல் என்னும் நூல் இருந்ததென்பதும். அது சூத்திரப்பாக்களினால் அமைந்த நூல் என்பதும் தெரிகின்றன. அதன் ஆசிரியர் யார் என்பது முதலிய செய்திகள் தெரியவில்லை.

18. கன்னிவன புராணம் 19. அஷ்டதச புராணம்

பூம்புலியூர் நாடகம் இயற்றிய வீரைத் தலைவன் பரசமய கோளரிமாமுனி என்பவரே இந்த இரண்டு புராணங்களையும் இயற்றினார். இந்தச் செய்தியைத் திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பாடலிபுரீசுரவரர் கோவில் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனங்கள் செய்யுள் நடையில் இயற்றப்பட்டுள்ளன. இக் கல்வெட்டு களில் இடையிடையே எழுத்துகள் சிதைந்தும் மறைந்தும் கிடப்பதால் நன்கு வாசிக்க முடியவில்லை. குலோத்துங்க சோழதேவர் என்னும் முதலாங் குலோத்துங்கனுடைய 41, 49ஆம் ஆட்சி ஆண்டுகளில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. கன்னிவன புராணம், அஷ்டதச புராணம், பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்களை இயற்றியதற்காக இந்நூலாசிரியருக்குப் பாலையூரில் நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனக் கவிகள் கூறுகின்றன.:

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 49.

தழைத்த திருப்பாதிரிப் ...

னவீரைதலைவ

னிருடைப் பரசமய கோளரி மாமுனிக்கு

கொழித்த லஷ்டதச புராணங்க ... தானங்

கன்னிவன புராணம்;

வழுத்தடி காட்டு தயானந்தரு மவ்ருத்தி

பாலையூறு

...

..

யிருபூவிளையுநி

...

எழுத்துமுறைத் தனமா யுள்ளளவு முண்ண

விறையிலியாம் வகைதந்தோ மிரண்டு மாவே.

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 41.

திருவாழுங் கறைஞாழற் சினை மருதம்.

சாசனந் தென்மருதம் பகைக்

கருவாழ வருங்கம லாலயற்குக் கன்னிவன புராணம் பாடிப் பரிசி ...