உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

பாட்டு மெய்சொலிப் பக்கமேசெலு

மெக்கர் தங்களை

99

145

என்று அவர் பாடுகிறார். அதாவது. கிளிவிருத்தம், எலிவிருத்தம் என்னும் இரண்டு நூல்கள் சமண சமய நூல்கள் என்று கூறுகிறார்.

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலும் கிளிவிருத்தம், எலிவிருத்தம் என்னும் நூல்கள் கூறப்படுகின்றன. வீரசோழிய உரையாசிரியரான பெருந் தேவனார் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவர். வீரசோழியம், யாப்பதிகாரம், 21ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:

66

குண்டலகேசி விருத்தம், கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுட் கலித்துறைகளும் உளவாம்.

இவ்வுரையாசிரியர் கூறுகிற குண்டலகேசி விருத்தம் என்பது பௌத்தநூல்; இந்நூல் மறைந்துவிட்டது. இதன் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் என்பன: மூன்றும் சமண சமய நூல்கள், இவைகளில் நரிவிருத்தம் இப்போதும் இருக்கிறது. கிளிவிருத்தம், எலிவிருத்தம் இரண்டும் கிடைக்கவில்லை. இந்நூல்கள் மறைந்துவிட்டன.

(குறிப்பு: பவாநந்தர் கழகம் 1942இல் அச்சிட்ட வீர சோழியத்தில், கிளிவிருத்தம் என்பதைக் கலிவிருத்தம் என்று தவறாக அச் சிட்டுள்ளது. ஆனால், பழைய வீரசோழியப் பதிப்பில் கிளிவிருத்தம் என்றே இருக்கிறது. 1907ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் அச்சிட்ட நரிவிருத்தம் என்னும் நூலில், முகவுரை 4ஆம் பக்கத்தில் கிளிவிருத்தம் என்றே கூறப்படுகிறது. எனவே, பவாநந்தர் கழகம் 1942 ஆம் ஆண்டில் அச்சிட்ட வீரசோழியப் பதிப்பில் கலிவிருத்தம் என்றிருப்பது தவறாகும்.)

25. குலோத்துங்கசோழ சரிதை

குலோத்துங்க சோழனுடைய வரலாற்றைக் கூறுகிற நூல் என்பது இதன் பெயரினாலே தெரிகிறது. இந்நூலை இயற்றியவர் பெயர் திருநாராயணபட்டன் என்பது. கவி குமுதசந்திர பண்டிதன் என்று இவருக்கு வேறுபெயர் உண்டென்றும் தெரிகிறது. இவர், குலோத்துங்க சோழ சரிதையை இயற்றித் திரிபுவனி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில்