உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

எண்ணில் இன்பமாம் ஈறி லாததே நண்ணி நாமினி நயக்கற் பாலதே

31. சித்தாந்தத் தொகை

151

9

சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின் உரைகளி லிருந்து இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்த தென்பது தெரிகிறது. இது பெளத்த சமய நூல். ஞானப்பிரகாசர், சிவஞான சித்தியார் (பரபக்கம், சௌத்தி ராந்தகன் மதம், 2ஆம் செய்யுள்) உரையில் சித்தாந்தத் தொகையி லிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். அவர் காட்டுவது: அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண் முழுதும் போதிநீழ னன்குணர்ந்த முனிவரன்றன்' இஃதவர்கள் (பௌத்தர்கள்) சித்தாந்தத் தொகை.

666

சித்தாந்தத் தொகையிலிருந்து இந்த இரண்டடிகளை மட்டும் மேற்கொள் காட்டிய உரையாசிரியர், மேற்படி சித்தியார் (சௌத்திராந்தகன் மதம், 31ஆம் செய்யுள்( உரையில் இச்செய்யுள் முழுவதையும் மேற்கோள் காட்டுகிறார். அது:

66

அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்

பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்தன் அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ

என்பது.

நீலகேசிக்கு உரையெழுதிய சமய திவாகர வாமன முனிவர் (புத்த வாதச் சருக்கம், 64ஆம் செய்யுள் உரை), சித்தாந்தத் தொகையிலிருந்து ஒரு பாட்டின் ஓர் அடியை மட்டும் மேற்கோள் காட்டுகிறார். அது, “மருடரு மனம் வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே" என்பதாம்.

பௌத்த சமய சித்தாந்தங்களைத் தொகுத்துக் கூறுவது இந்நூல் என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 32. சூத்ரக சரிதம்

8

சூத்ரக சரிதம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகின்றது. காஞ்சிபுரத்தில் இருந்த லலிதாலயர் என்பவர் எழுதியது. இந்நூல் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்த லலிதாலயர், பேர்போன சிற்பா சாரியரான மாந்தாதா என்பவரின் மகனார். லலிதாலயர் சிற்பக்