உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இந்த உலாவின் பெயர் என்னவென்று இந்தச் சாசனம் கூறவில்லை. திருக்காடலூர் குமரன் உலா என்று பெயர் இருக்கக் கூடும் என்று யூகிக்கப் படுகிறது. திருக்காமி அவதானியாரின் வரலாறு தெரியவில்லை.10

39. திருப்பட்டீச்சுரப் புராணம்

கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்த இரேவண சித்தர் என்பவர் இயற்றியது திருப்பட்டீச்சுரப் புராணம். பட்டீச்சுரம், கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள ஊர். இவ்வூரைப் பற்றிய புராணம் இது. இந்தப் புராணம் இப்போது கிடைக்கவில்லை.

40. திருப்பதிகம்

இப்பெயருள்ள பௌத்த சமய நூல் ஒன்று இருந்ததென்பது சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின் உரைகளிலிருந்து தெரிகிறது. சிவஞான சித்தியார் (சௌத்திராந்தகன் மதம் 2ஆம் செய்யுள்) உரையில் ஞானப்பிரகாசர் இந்நூலிலிருந்து இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.

66

"எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழந்து

மெண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்து மெண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி

எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ.

99

இச்செய்யுளை மேற்கோள் காட்டிய பின்னர், 'இது, திருப்பதிகமெனக் கொள்க' என்று எழுதுகிறார். சிவஞான சித்தியார், சௌந்திராந்தகன் மத மறுதலை, 8ஆம் செய்யுள் உரையிலும் இதே செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.

நீலகேசி கடவுள் வாழ்த்து உரையில், பௌத்த மதத்தைக் கண்டிக்கும் இடத்தில், சமய திவாகர வாமன முனிவர் இந்தச் செய் யுளையும் மற்றொரு செய்யுளையும் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதைக் கூற வில்லை. கூறவில்லையாயினும், இச் செய்யுள்கள், ஞானப் பிரகாசர் குறிப்பிடுகிற திருப்பதிகம் என்னும் நூலைச் சேர்ந்தவை என்பது தெளிவாகத் தெரிகின்றது. சமய திவாகர வாமன முனிவர் மேற்கோள் காட்டும் செய்யுள்கள் இவை: