உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

46. தேசிகமாலை

159

யாப்பருங்கலம், தொடையோத்து, 52ஆம் சூத்திர உரையில், விருத்தியுரைகாரர் தேசிகமாலை என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது வருமாறு:

“பன்மணிமாலையும் மும்மணிக்கோவையும் உதயணன் கதையும் தேசிகமாலையும் முதலாகவுடைய தொடர் நிலைச் செய்யுள் களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க.”

இவர் கூறுகிற பன்மணிமாலையும் மும்மணிக்கோவையும் எவை என்பது தெரியவில்லை. ஏனென்றால், இப்போது பல பன்மணி மாலைகளும் மும்மணிக்கோவைகளும் உள்ளன. இவை இப்போதுள் ளவைகளின் வேறுபட்ட நூல்களா என்பது தெரியவில்லை. உதயணன் கதை என்பது பெருங்கதை. அது இப்போதும் இருக்கிறது. தேசிகமாலை என்னும் அந்தாதித் தொடர்நிலைச் செய்யுள் இப்போது கிடைக்க வில்லை.

47. நல்லைநாயக நான்மணிமாலை

யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த சுப்பையர் என்பவர் இதன் ஆசிரியர். இவர் கி.பி. 1795இல் வாழ்ந்தவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி மறைந்துவிட்டது போலவே, இவர் இயற்றிய நல்லை நாயக நான்மணிமாலையும் மறைந்துவிட்டது.

48. நாரத சரிதை

புறத்திரட்டு என்னும் தொகை நூலிலே, நாரத சரிதையி லிருந்து எட்டுச் செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நாரத சரிதை என்பது நாரதன் என்பவனின் சரித்திரத்தைக் கூறுவது போலும். ஜைன நூலாகிய ஸ்ரீபுராணத்தில், நாரதன், பர்வதன் என்னும் இருவர் சரிதம் கூறப் படுகிறது. அந்த நாரதனின் சரிதமாக இந்த நாரத சரிதை என்னும் நூல் அமைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. நாரத சரிதை என்னும் இந்நூலினை இயற்றியவர் யார். அவர் எக்காலத்தில் இந்நூலை இயற்றினார் என்பன தெரியவில்லை. புறத்திரட்டில் தொகுக்கப் பட்டுள்ள இந்நூலின் செய்யுள்கள் வருமாறு: