உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

49. பரமத திமிரபானு

பரமதம் - பிற சமயம். திமிரம்

161

இருள். பானு - சூரியன். பிற

மதங்களாகிய இருளைப் போக்கும் சூரியன் என்பது பொருள். இந் நூலை இயற்றியவர் மறைஞான சம்பந்தர் என்பவர். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. சைவ சமய நூல்.

50. பரிப்பெருமாள் காமநூல்

திருக்குறள் உரையாசிரியர்களில் ஒருவராகிய, பரிப்பெருமாள், காமநூல் ஒன்று இயற்றினார் என்று அவரது உரைப்பாயிரச் செய்யுள் கூறுகிறது:

66

“தெள்ளி மொழியிலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார், ஒள்ளிய காமநூல் ஓர்ந்துரைத்து – வள்ளுவனார்

பொய்யற்ற முப்பால் பொருளுரைத்தான் தென்செழுவை தெய்வப் பரிபெருமாள் தேர்ந்து

என்பது அச்செய்யுள். இந்தக் காமநூலின் பெயர் என்னவென்று தெரிய வில்லை. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

51. பரிபாடை

"

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பதை, யாப்பருங் கலம் (1-ஆம் சூத்திரம்) விருத்தியுரையில், "பரி பாடைச் சூத்திரம் என்பனவும் உள. அவை, ஈண்டுத் தந்திர வுத்தியுட்பட்டங்கு மெனக் கொள்க" என்று எழுதியிருப்பதிலிருந்து அறியலாம்.

இது பரிபாடல் என்னும் நூலைச் சேர்ந்தது அன்று. பரிபாடல் என்பது பரிபாஷையாகும். வைத்தியம் சோதிடம், சமய சாத்திரம் முதலிய கலைகளுக்குப் பரிபாஷைகள் உண்டு. அத்தகைய பரிபாஷையைக் கூறுகிற நூலாக இருக்கக்கூடும் இந்நூல். இதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

52. பிங்கள சரிதை. 53 வாமன சரிதை

நவநீதப் பாட்டியலின் பழைய உரையாசிரியர் இவ்விரண்டு நூல்களைக் கூறுகிறார். "பாட்டுப் பொருளிடம்” என்னும் தொடக்கத்து 64-ஆம் செய்யுளுரையில் பழைய உரையாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: "பாட்டாற் றொக்கது குறுந்தொகை: எண்ணாற்றொக்கது பன்னிரு படலமும் பதிற்றுப் பத்தும்: செய்தானாற் பெயர்பெற்றது - திருவள்ளுவப் பயன்: செய்வித்தானால் பெயர்பெற்றன - பிங்கல சரிதை, வாமன சரிதை.'