உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே

கந்தருவத்

தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத் தோற்று மிசையிசைப்பாச் சுட்டு’

என்றார் இசைநுணுக்கமுடைய சிகண்டியாரென்க.

173

(சிலம்பு. கடலாடு காதை, 35ஆம் அடி, உரை. மேற்கோள்) சிகண்டி என்பவரைப் பற்றிப் பௌத்த சமய நூல்களில் ஒரு செய்தி காணப்படுகிறது. சக்கன் (இந்திரன்) உடைய தேர்ப்பாகனான மாதவியின் மகன் சிகண்டி என்பவன். இந்தச் சிகண்டியின் மீது, திம்பரு (தும்புரு?) என்னும் கந்தருவனுடைய மகளான பத்தா சூரிய வச்சசா என்னும் மங்கை காதல் கொண்டிருந்தாள்.

பஞ்சசிகா என்னும் கந்தருவன் பதினாறு வயதுடைய இளைஞன்; அழகன்; இசைக்கலையில் தேர்ந்தவன். சக்கனுடைய (இந்திரனுடைய) இசைப்புலவனாக இருந்தவன். பஞ்சசிகா பத்தவச்சசாலின்மேல் காதல்கொண்டு அக்காதலைப் பற்றி இசைப்பாட்டு ஒன்றை இயற்றினான். அவன் அப்பாடலை அவளிடம் பாடினான். அதனைக் கேட்ட அவள், அதில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் சிறப்புக் கூறப்பட்டிருந்தபடியால், தான் காதலித்திருந்த சிகண்டியை மணஞ்செய்துகொள்ளாமல், பஞ்ச சிகாவை மணஞ்செய்து கொண்டாள்.

இந்தக் கதையில் கூறப்பட்ட சிகண்டியும் இசைநுணுக்கம் செய்த சிகண்டியும் ஒருவரா, அல்லது வெவ்வேறு ஆண்களா என்பது ஆராய்ச்சிக்குரியது.

3. இந்திர காளியம்

அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைச்சிறப்புப் பாயிரத்தில், 'இந்திர காளியம்’ என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்" என்று அவர் கூறுகிறார். எனவே, இந்நூலாசிரியர் பாரசவ இனத்தைச் சேர்ந்தவர் என்றும், யாமளேந்திரர் என்பது அவர் பெயர் என்றும் கருதலாம். இது இசைத் தமிழ் நூல்.

பாரசவன் என்பது கொற்றவை (துர்க்கையைப் பூசை செய்கிற வர்களுக்குப் பெயர். என்னை? “தேவிக்குத் திருவுடையாக உபாசக் பாரசவன் சார்த்துவன கெளசிகப் பட்டாடைகளேயோ?....... அன்றியும், தேவியைப் பூசிக்கும் பாரசவன் அமுது செய்விப்பன அறுசுவையடி