உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

யாவன, சிற்றிசையும் பேரிசையு முதலாக ஒதப்படுவன” என்று எழுதுகிறார்.

இசைத்தமிழில்

இவர்கள் கூறுகிற சிற்றிசை, பேரிசை, வரி என்பன இசையின் பகுதிகள். இவை சிற்றிசை பேரிசை என்னும் நூலின் பெயர்களைக் குறிப்பன அல்ல. ஆனால், மேலே இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட சிற்றிசை பேரிசை என்பன இசையைப் பற்றிய நூல்கள் என்பது ஐயமற விளங்குகிறது.

இவ்வாறே, கூத்து, வரி என்று இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் குறிப்பது, நாடகத்தையும் வரிக் கூத்தையும் குறிக்கிற இரண்டு நூல்கள் என்பது தெரிகின்றது.

6. பஞ்ச பாரதீயம்

இப்பெயருடைய நூல் ஒன்று இருந்தது என்பது, சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்குநல்லார் எழுதிய உரையினால் தெரிகிறது. இந்நூலை இயற்றியவர் நாரதன் என்பவர். இந்த நூல் அடியார்க்குநல்லார் காலத்திலேயே மறைந்து விட்டது. இந்நூலிலிருந்து ஒரே ஒரு செய்யுளே அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அடியார்க்குநல்லார், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் இந் நூலைப் பற்றி எழுதுவது:

"இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன.

وو

சிலப்பதிகாரம், வேனிற்காதை, 'செம்பகை யார்ப்பே கூட மதிர்வே. வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து” என்னுய் அடிகளுக்கு உரைகூறிய அடியார்க்குநல்லார், இந்நூலிலிருந்து கீழ்க்காணும் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்:

இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகுஞ்

சொன்னமாத் திரையினோங்க விசைத்திடுஞ் சுருதியார்ப்பே மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகு

நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டி னாரே.