உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

16. பரதசேனாபதீயம்

195

இது நாடக இலக்கணத்தைக் கூறும் நூல். இதனை இயற்றியவர் ஆதிவாயிலார் என்பவர். இதனை, “ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயம்” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைச் சிறப்புப் பாயிரத்தில் எழுதுவதனால் அறியலாம். இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இந்நூலினின்று சில செய்யுள்களை அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிறார். பரதநாட்டியத்தைப் பற்றிக் கூறுவது இந்நூல் என்று தெரிகிறது.

"பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாட் புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே வண்டிருக்குங் கூந்தன் மடவரலை யையாண்டிற் றண்டியஞ்சேர் விப்பதே சால்பு'

எனவும்,

‘வட்டணையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய வெட்டுட னீரிரண்டாண் டெய்தியபின்-கட்டளைய கீதக் குறிப்பு மலங்கார முங்கிளரச்

சோதித் தரங்கேறச் சூழ்’

எனவும்,

நன்னர் விருப்புடையோ ணற்குணமு மிக்குயர்ந்தோள் சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் - பன்னிரண்டாண் டேய்ந்ததற்பி னாடலுடன் பாடலழ கிம்மூன்றும்

வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு’

எனவுங் கூறினார் பரதசேனாபதியார்.

(சிலம்பு., அரங்கேற்று., 10ஆம் அடி,

அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

மேற்காட்டிய செய்யுள்களில், "வட்டணையுத் தூசியும்" என்னும் இரண்டாவது செய்யுளை, சீவக சிந்தாமணி 673ஆம் செய்யுள் உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ளார்:

உவர்ப்பிற் கலக்கமாங் கைப்பின்வருங் கேடு

துவர்ப்பிற் பயமாஞ் சுவைக - ளவற்றிற் புளிநோய் பசிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப் பளிபெருகு மாவ தரங்கு.

,

(சிலம்பு., அரங்கேற்று., அடி 95, 96, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)