உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

"அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக

வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க

வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க

பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச்சொலென் றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச் செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச் சேவடி தேவரை யேத்திப் பூதரை மூவடி முக்கால் வெண்பா மொழிந்து செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக் கவியொழுக் கத்து நின்றுழி வேந்தன் கொடுப்பன கொடுப்ப அடுக்கு மென்ப

என்றார் மதிவாணனாரென்க.

وو

(சிலம்பு., கடலாடு காதை, மேற்படி)

இந்நூல் இப்போது மறைந்து விட்டது. இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

19. முறுவல்

இப்பெயரையுடைய நாடகத்தமிழ் நூல் ஒன்று இருந்தது என்பது அடியார்க்கு நல்லார் உரையினால் அறிகிறோம்.

66

"நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத் துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்”

என்று அவர் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் எழுதுகிறார் அவர் காலத்தில் வழங்கிய முறுவல் சூத்திரங்கள் சிலவும் இப்போது மறைந்துவிட்டன: முறுவல் ஆசிரியரின் பெயரும் தெரியவில்லை.

20. பூம்புலியூர் நாடகம்

தென் ஆர்க்காட்டு மாவட்டம், கூடலூர்த் தாலூகா, திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பாடலிபுரீசுவரர் கோவில் கல்வெட்டுச் சாசனங்க