உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ. பேரெண்

இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்

வலம்புரித் தடக்கையோய் மானு நின்னிறம் வரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரைவு நின்னுடை.

அளவெண்

கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை தண்சுட ருறுபகை தணித்த வாழியை ஒலியிய லுவண மோங்கிய கொடியினை. வலிமிகு கசட மாற்றிய வடியினை.

இடையெண்

போரவுணர்க் கடந்தோய் நீ.

புணர்மருதம் பிறந்தோய் நீ.

நீரகலம் அளந்தோய் நீ.

நிழறிகழைம் படையோய் நீ.

ஊழி நீஇ. உலகு நீஇ. உருவு நீஇ. அருவு நீஇ. ஆழி நீஇ. அருளு நீஇ. அறமு நீஇ. மறமு நீஇ.

சிற்றெண்

தனிச்சொல்

என வாங்கு