உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வினைநிலை யுரைத்தலும் வினாவிற் கேற்றலும்

பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே.

5

ஆலு மானு மோடு மொடுவும்

சாலு மூன்றாம் வேற்றுமைத் தனுவே

செய்வோன் காரணஞ் செயத்தகு கருவி

ஆற னுருபே யதுவா தவ்வும்

யெய்திய தொழின்முத லியைபுடைத் ததன்பொருள்.

6

வேறொன் றுரியதைத் தனக்குரி யதையென

விருபாற் கிழமையின் மருவுற மருமே ஐம்பா லுரிமையு மதன்றற் கிழமை.

மற்றுச்சொன் னோக்கா மரபின வனைத்து முற்றி நிற்பன முற்றியன் மொழியே. காலமொடு கருத வரினு மாரை மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே. முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினு முற்றுச்சொ லென்று முறைமையிற் றிரியா. காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே. காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது வினைகொள் ளும்மது வினையெச் சம்மே.

7

00

9

10

11

12

எனைத்துமுற் றடுக்கினு மனைத்துமொரு பெயர்மேல்

நினைத்துக்கொள நிகழு நிகழ்த்திய முற்றே

வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்

பலப்பல வடுக்கினு முற்றுமொழிப் படிய.

13

உலக வழக்கமு மொருமுக் காலமு

நிலைபெற வுணர்தரு முதுமறை நெறியான்.

14

அசைநிலை யிரண்டினும் பொருண்மொழி மூன்றினும்

இசைநிறை நான்கினு மொருமொழி தொடரும்.

15

கண்டுபான் மயங்கு மையக் கிளவி

நின்றோர் வருவோ ரென்றுசொன் னிகழக்

99

காணா வையமும் பல்லோர் படர்க்கை.

16