உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -15

“இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடடுத்த தன்மையின், ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாராம். எனின், அவர் அறியாது கூறினார்; செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல், இவர் நல்லிசைப் புலவராகார்; இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுள் களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவார்; அங்ஙனம் நீக்காது கோத்த தற்குக் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச் செய்யுட்கு உறாமையா னென்றுணர்க.

66

'இச்சொன்னிலை நோக்குமிடத்து ஒருகுற்றமுமின்று; என்னை? அன்னவென்னும் அகரவீற்றுப் பெயரெச்ச உவம உருபு தீயென்னும் பெயரைச் சேர்ந்து நின்று இன் சாரியை இடையே அடுத்து நிற்றலின், நன்னனென நகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லா யினன்றே அக்குற்றம் உளதாவதென மறுக்க. நன்னவென அண்மை விளியாய் நின்ற முன்னிலைப் பெயரென்று குற்றம் கூறுவார்க்கு இப்பாட்டுப் படர்க்கையேயாய் நிற்றலின் குற்றமின்றென்க.'

2. அகத்தியர் பாட்டியல்

وو

கி. பி. 16ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதப்படுகின்ற பரஞ்சோதியார் தாம் இயற்றிய சிதம்பரப் பாட்டியலில்,

"பாமேவு தமிழ்ப் பொதியக் குறுமுனிவன் கூறும்

பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவேன் யானே.

என்று கூறுகிறபடியால், அகத்தியர் பாட்டியல் என்னும் ஒருநூல் இருந்த தென்பது தெரிகிறது. அன்றியும், பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும், ‘அகத்தியர் பாட்டியல்' என்னும் பெயரினால் இரண்டு சூத்திரங்கள் காணப்படுகின்றன. எனவே, அகத்தியர் பாட்டியல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது ஐயமற விளங்குகிறது. இது செய்யுளிலக்கணம் கூறுவது.

அகத்தியர் தம் பெயரால் அகத்தியம் என்னும் விரிவான முத்தமிழ் இலக்கணநூலை இயற்றினார் என்று கூறப்படுகிறது. அத்தகைய பெரு நூலை இயற்றிய அகத்தியர், பாட்டியல் என்னும் இச்சிறுநூலை ஏன் இயற்றினார்? பிற்காலத்துப் புலவர் ஒருவர், அகத்தியர் பெயரால் இயற்றிவைத்த ஓர் நூல் போலும் இது. சங்க காலத்துப் புலவர்களின்