உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -15

இந்நூலுக்கு, இராசப் பவுத்திரப் பல்லவதரையன் என்பவர் உரை எழுதியிருந்தார் என்பது, மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையினின்று தெரிகிறது.

அவிநய நூலாசிரியர் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்பது. இவர் இயற்றிய அவிநயச் சூத்திரம் ஒன்றால் தெரிகிறது. இந்தச் சூத்திரத்தில், ஒலி அணுவினால் எழுந்து ஒலிகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கொள்கையைக் கூறுகிறார். அவிநய நூலுக்கு மிகப் பிற்பட்ட காலத்தவராகிய பவணந்தியாரும் தாம் இயற்றிய நன்னூலில், ஒலியணுத்திரளினாலே எழுத்துகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கருத்தைக் கூறியுள்ளார். அவிநய நூலாசிரியர், ஒலியணுவினால் எழுத்துகள் பிறக்கின்றன என்று கூறிய சூத்திரத்தை, மயிலைநாதர் என்னும் ஜைன சமய உரையாசிரியர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (எழுத்தியல், 13ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார்.

'ஆற்ற லுடையுயிர் முயற்சியி னணுவியைந்

தேற்றன வொலியாய்த் தோன்றுதல் பிறப்பே'

என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க” என்பது அவர் காட்டிய மேற்கோள்.

எனவே, அவிநய நூலாசிரியர், நன்னூலாசிரியரைப் போன்று சமண சமயத்தவர் என்பது தெளிவாக விளங்குகிறது.

தக்கயாகப் பரணி உரையாசிரியர் (காளிக்குக் கூளி கூறியது. 153ஆம் தாழிசை உரை), அவிநய நூல் கருத்தைத் தமது உரையில் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: "நளினத்தை யுடையது நளினி; அவிநயத்தால் உடைப் பெயர்ச்சொல் ஈறு திரிந்தது.

وو

வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் இந்நூலைப் பற்றி (சொல்லதிகாரம், திரியாபதப் படல இறுதியில்) இவ்வாறு தமது உரையில் எழுதுகிறார்:

“திணைபால் மரபு வினாச்சொல் பிடஞ்சொல்

இணையா வழுத்தொகையோ டெச்ச - மணையாக் கவினையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொண் டவிநயனார் ஆராய்ந்தார் சொல்