உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப வகையது வெண்டளை யாகும். உரிச்சீ ரதனு ளுரைத்ததை யன்றிக் கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே. இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப மிலவாய் விரவி நடப்பின் அதற்பெய ராசிரி யத்தளை யாகும்.

வெண்சீ ரிறுதியி னேரசை பின்வரின் வெண்சீர் வெண்டளை யாகு மென்ப.

237

5

6

7

00

வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக்

கண்டன வெல்லாங் கலித்தளை யாகும்.

9

தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத்

தொன்றினு மொன்றா தொழியினும் வஞ்சியின் பந்த மெனப்பெயர் பகரப் படுமே.

10

இருசீர் குறளடி சிந்தடி முச்சீர்

அளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி

அறுசீர் கழிநெடி லாகு மென்ப.

11

எண்சீ ரெழுசீ ரிவையாங் கழிநெடிற்

கொன்றிய வென்ப வுணர்ந்திசி னோரே.

12

இரண்டு முதலா வெட்டீ றாகத்

திரண்ட சீரா னடிமுடி வுடைய

இறந்தன வந்து நிறைந்தடி முடியினும்

சிறந்த வல்ல செய்யு ளுள்ளே.

13

ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை

இருதொடை மூன்றா மடியி னிழிந்து

வருவன வாசிரிய மில்லென மொழிப

வஞ்சியு மப்பா வழக்கின வாகும்.

14

நான்கா மடியினு மூன்றாந் தொடையினுந் தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே.

15

உரைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை