உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

242

மாகுன வென்ப வறிந்திசி னோரே.

இணைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்

இணையுள் வாசிரி யத்தன வாகா.

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப வகையது வெண்டனை யாகும்.

உரிச்சீ ரதனு ளுரைத்ததை யன்றிக்

கலக்குந் தளையெனக் கண்டிசி னோரே.

இயற்சீ ரிரண்டு தலைப்பெய றம்முள் விகற்ப மிலவாய் விரவி நடப்பின் அதற்பெய ராசிரி யத்தனை யாகும்.

14

15

16

17

வெண்சீ ரிறுதிக் கிணையசை பின்வரக்

கண்டன வெல்லாங் கலித்தளையாகும்.

18

தன்சீ ரிரண்டு தலைப்பெய றம்முளொத்

தொன்றினு மொன்றா தொழியினும் வஞ்சியின்

பந்த மெனப்பெயர் பகரப் படுமே.

19

குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென்

றைவகை மரபின வடிவகை தானே.

20

இருசீர் குறளடி சிந்தடி முச்சீர்

அளவடி நாற்சீ ரறுசீர் அதனின்

இழிப நெடிலடி யென்றிசி னோரே.

21

சிந்தடி குறளடி யென்றா இரண்டும்

வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே.

22

ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும்

நாற்சீ ரடியா னடைபெற் றனவே.

23

சிந்துங் குறளும் வருதலு மவ்வழி

யுண்டென் றறைய வுணர்ந்திசி னோரே.

24

விருத்தந் துறையொடு தாழிசை யென்றா

இனச்செய்யு ளெல்லா வடியினு நடக்கும்.

25

ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை யிருதொடை மூன்றா மடியி னிழிந்து