உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

247

ஒன்றின நான்மை யுடைத்தாய்க் குறளடி

வந்தன வஞ்சித் துறையென லாகும்.

64

குறளடி நான்கிவை கூடின வாயின்

முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி

வருவன வஞ்சித் தாழிசை யாகும்.

65

உணர்த்திய பாவினு ளொத்த வடிகள்

வகுத்துரை பெற்றியு மன்றிப் பிறவும்

நடக்குன வாண்டை நடைவகை யுள்ளே.

66

உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும்

மறுக்கப் படாத மரபின வாகியும்

எழுவா யிடமா யடிப்பொரு ளெல்லாம்

தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே.

67

66

வஞ்சி மருங்கி னிறுதியு மாமெனக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே.

99

68

காக்கைபாடினியார் தமிழ் நூல் வழங்கும் எல்லையைக் கூறும்போது.

“வடக்குந் தெற்குங் குடக்கும் குணக்கும்

வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்

எனக் கூறியதாக, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், உரைப்பாயிரத்தில் காக்கைபாடினியார் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அந்தச் சூத்திரத்தை முழுவதும் கூறவில்லை. 11., 12., 13. குறுவேட்டுவச் செய்யுள், லோகவிலாசனி, பெருவளநல்லூர்ப் பாசண்டம்.

இந்த மூன்று நூல்களின் பெயரை யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம். ஒழிபியலில் அவர் கூறுவது இது:

"இனிப் பாவினங்களுட் சமக்கிருதமும் வேற்றுப்பாடையும் விரவிவந்தால் அவற்றையு மலகிட்டுப் பாச்சார்த்தி வழங்கப்படும். அவை, குறுவேட்டுவச் செய்யுளும், லோகவிலாசனியும், பெருவள நல்லூர்ப் பாசண்டமும் முதலாகவுடையன எனக் கொள்க.