உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

249

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கையனாரைப்பற்றி இவ்வாறு

எழுதுகிறார்:

“இஃது ஈறுபற்றி யறியுந் தன்மைத்தாகலின், இயைபுத் தொடைக் கிவ்வா றெட்டு விகற்பமும் சொன்னார், கையனார், தொல்கப்பியனார் முதலாகிய ஒருசாராசிரியர்.'

وو

(யாப்பருங்கலம், தொடையோத்து, 34ஆம் சூத்திர உரை)

"

கடையிணை முரண், பின்முரண், இடைப்புணர் முரண் தொடை யிலக்கணத்திற்கு உதாரணமாகச் சில செய்யுள்களை மேற்கோள் காட்டிய பிறகு யாப்பருங்கல விருத்தியுரைகாரர், “இவ்வாறு கூறினார் கையனார் என்னும் ஆசிரியரெனக் கொள்க,” என்று எழுதுகிறார்.

(யாப்பருங்கலம், தொடையோத்து, 39ஆம் சூத்திர உரை)

“இனமோனை மூன்று வகைப்படும், அவை வல்லின மோனையும், மெல்லின மோனையும், இடையின மோனையுமாம். அவற்றுள் வல்லின மோனை வருமாறு:

கயலே ருண்கண் கலுழ நாளுஞ்

சுடர்புரை திருநுதல் பசலை பாயத்

திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப்

போகல் வாழி பைய பூத்த

கொழுங்கொடி யணிமலர் தயங்கப்

பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே'

இஃதெல்லாவடியு முதற்கண் வல்லினமே வந்தமையின் வல்லின மோனை யென்று கையனார் காட்டிய பாட்டு.

(யாப்பருங்கலம், தொடையோத்து உரை)

“கையனார் முதலாகிய வொருசாராசிரியர் இரண்டாஞ் சீர்க்க ணில்லாததனைக் கீழ்க்கதுவா யென்றும். ஈற்றயற் சீர்க்க ணில்லாததனை மேற்கதுவா யென்றும் வழங்கிய தறிவித்தற்கொரு தோற்ற முணர்த்திய தெனக் கொள்க.'

66

(யாப்பருங்கலம், தொடையோத்து, 47ஆம் சூத்திர உரை) இவ்வாறு வண்ண விகற்ப மெடுத்தோதினார் தொல்காப்பி யனாரும் கையனாரு முதலாக உடையார்.”

(யாப்பருங்கலம், ஒழிபியல் உரை)