உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

253

'இணைநூல் முடிபு தன்னூன் மேற்றே' என்பதனால் காக்கை பாடினியார் ஒதிய தளையிலக்கணம் ஈண்டுங் கோடல்வேண்டு மெனின், அஃதே கருத்தாயின் இவர்க்கும் அவர் முடிவே பற்றித் தளை தளையல் வேண்டும்; அல்லதூஉம், அவர்க்கு இளையாரான சிறு காக்கைபாடினியார் தளைகொண்டி லரென்பது இதனாற் பெற்றாம். தளை வேண்டினார் பிற்காலத்தோராசிரிய ரென்பது. என்னை?

‘வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த

நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்’

எனக் கூறி வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறியவற்றானே எல்லை கண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கை பாடினியத்து.

‘வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்

தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்’

எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தாரல்லாரென்பதுஉம், குறும்பணைநாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்றென்பதூஉம் பெற்றாம். பெறவே, அவர் இவரோடு ஒருசாலை மாணாக்கர் அல்லரென்பது எல்லாரும் உணரல் வேண்டுமென்பது.” மேலும் பேராசிரியர் கூறுகிறார்:

"பிற்காலத்துக் காக்கைபாடினியாருந் தொல்காப்பியரோடு பொருந்தவே நூல் செய்தாரென்பது. மற்று,

'வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்

வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே’

எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறுகாக்கைபாடினியார் செய்த நூலினையும் அதன் வழிநூ லென்னுமோவெனின், ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவு மாற்றாற் செய்தது, ஆராயின், அது வழிநூலாதற்கு இழுக்கென்னை

என்க.