உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

படுகிறபடியால், நல்லாறன் என்பதே சரியான பெயர்

கொள்ளலாம்.

என்று

நல்லாறன் மொழிவரி என்னும் இலக்கண நூலிலிருந்து யாப்பருங்கல விருத்தியுரைகாரர் காட்டும் மேற்கோள் சூத்திரங்கள் இவை:

“அஆ ஐஔ வென்றிவை யெனாஅ

இஈ எஏ யென்றிவை யெனாஅ

உஊ ஒஓ வென்றிவை யெனாஅத்

தசமவ ஞநவெனு மென்றிவை யெனாஅ

முந்நா லுயிரு மூவிரு மெய்யுந்

தம்முண் மயங்கினுந் தவறின் றென்ப.'

என்றிவை இனம் ஆமாறு எடுத்தோதினார் நல்லாறனார் எனக் கொள்க.**

وو

(யாப்பருங்கலம். தொடையோத்து, உரைமேற்கோள்.)

“புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே

யறநிலை வஞ்சியுங் கலியு மாகா

வெண்பா வாசிரிய வியலான் வருமே

வஞ்சி கலியவற் றியலா வவற்றுள்

இடையுறு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும்

கடையெழு சீரிரண் டகவியும் வருமே’

என்றார் நல்லாதனார்." (நல்லாறனார் என்பதும் பாடம்).

66

(யாப்பருங்கலம், செய்யுளியல், 2ஆம் சூத்திரம் உரை மேற்கோள்)

“புறநிலை வாயுறை செவியறி வவையடக்

கெனவிவை வஞ்சி கலியவற் றியலா

என்றார் நல்லாறனார்.

(யாப்பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திரம் உரை மேற்கோள்)

“உரியசைச் சீர்ப்பி னுகர நேராய்த்

திரியுந் தளையில சேர்த லானே

என்றார் நல்லாறனார்.

وو

(யாப்பருங்கலம், ஒழிபியல், உரை மேற்கோள்)