உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

நச்சினார்க்கினியர், சிந்தாமணி (கோவிந்தையார் - 20) உரையில்.

“பல்லாக் கொண்டார் ஒல்லா ரென்னும்

பூசல் கேட்டு கையது மாற்றி"

277

என்னும் பன்னிருபடலச் சூத்திர அடிகளை மேற்கோள் காட்டுகிறார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர், கீழ்க்காணும் பன்னிருபடலச் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்:

66

'அகத்திணை யகவலுள் வஞ்சி வாரா. என்னை?

‘அகத்திணை மருங்கி னளவு மயங்கி

விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி யடியின் யாத்திலர் வஞ்சி

யகத்திணை மருங்கி னணையு மாறே’

என்பது பன்னிருபடலத்துப் பெருந்திணைச் சூத்திரமாகலின்.’

(யாப்பருங்கலம், உறுப்பியல் அடியோத்து 9)

ஆன்ற சிறப்பி னறம்பொரு ளின்பமென

மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள் அறமு மின்பமு மகலா தாகிப்

புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே

என்னும் பன்னிரு படலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்: அவர் கூறுதல் வாகைத் திணைக்கண் ‘கட்டில் நீத்த பால்' முதலாகக் ‘காமம் நீத்த பால்' ஈறாக அறங் கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.'

66

(தொல். புறத்தினையியல், உரை)

"ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டு மாயுங்கால் காந்தன் அமர்த்த லீரைந்தும் அகத்தின் புறமே

66

‘கைக்கிள் யென்னா பெருந்திணை யென்றால் கத்திணை இரண்டும் அகத்திணை புறனே

இவை பன்னிரு படலம்.

99

(யாப்பருங்கலம், ஒழிபியல் உரைமேற்கோள்)