உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

39. பெரிய முப்பழம்

283

இந்நூலின் பெயர் யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலை, மாற்றே சக்கரஞ் சுழிகுளம் என்னும் சூத்திரத்தில் வருகிற பாடுதல் மரபு என்பதற்கு உரை கூறுகிற விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார்:

“பாடுதன் மரபு : என்பது, குலனும் விச்சையும் ஒழுக்கமும் பருவமும் என்றிவற்றிற்குத் தக்கவகையாற் பாட்டுடைத் தலை மகனையும் அவன் சின்னங்களையுமே பாடுதலும், கிளவிப்பொரு எல்லவற்றோடு பாட்டுடைத் தலைமகனைப் பெயரும் ஊரும் முதலியன உறுப்புகளைச் சார்த்திப் பாடுதலும், தீயனவற்றை அவன் பகைவரைச் சாத்திப் பாடுதலும் என இரண்டாம். அவை யெல்லாம் பெரிய முப்பழம் முதலாயினவற்றுட் கண்டுகொள்க.

وو

இதனால், பெரிய முப்பழம் என்னும் பாட்டியல் நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

40. பேராசிரியர் (மயேச்சுவரர்) இலக்கண நூல்

மயேச்சுவரர் என்னும் பெயருள்ள ஆசிரியர் ஒருவர் இலக்கண நூல் (செய்யுளிலக்கண நூல்?) ஒன்று செய்திருந்தார் என்பது தெரிகிறது. மயேச்சுவரருக்குப் பேராசிரியர் என்னும் சிறப்புப்பெயரும் வழங்கி வந்தது போலும். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மயேச்சுவரராகிய பேராசிரியரைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து எழுதுகிறார். அவர் எழுதுவது வருமாறு:- பிறைநெடுமுடிக் கறைமிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர். நீர்மலி வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், வாம மேகலை மாதையோர் பாகனார் நாமமகிழ்ந்த நல்லாசிரியர், திரிபுர மெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், உயரும் புர நகரைச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுர மெரித்த விரிசடை நிருத்தர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுரமெரித்த எரிசுடர்க் கடவுள் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர், பிறைமுடியோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், காமவேளைக் கறுத்த புத்தேள் நாமந்தாங்கிய நல்லாசிரியர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் திருப் பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர். இவ்வாறு பேராசிரியருக்குப் பல அடைமொழி கொடுத்து கூறுகிற யாப்பருங்கல விருத்தியுரைகாரர், பல