உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

பேரெண் ணிட்ட வெண்ணுடைத் தாகிச் சிற்றெண் வழியா லராகவடி நான்கும் கீழள வாகப் பேரள வெட்டாச் சீர்வகை நான்கு முதல்பதின் மூன்றா நேரப் பட்ட விடைநடு வெனைத்துஞ் சீர்வகை முறைமையி னராகம் பெற்று மம்போ தரங்கத் தராகவடி யின்றி மடக்கடி மேலே மூச்சீ ரெய்திக்

குறிலிணை பயின்ற வசைமிசை முடுகி யடுக்கிசை முடுகிய லராக மென்னு

விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணக மென்ப.

அந்தாதித் தொடையினு மடிநடை யுடைமையு முந்தையோர் கண்ட முறைமை யென்ப.

தரவே தரவிணை தாழிசை சிலபல வரன்முறை பிறழ வயற்பா மயங்கியும் தனிச்சொற் பலவா யிடையிடை நடந்தவும் ஒத்தா ழிசைக்கலி யுறுப்பினிற் பிறழ்ந்தவும் வைத்த வழிமுறையால் வண்ணக விறுவாய் மயங்கி வந்தவு மியங்குநெறி முறையிற் கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்.

அடிபல வாகியுக் கடையடி சீர்மிகிற் கடிவரை யில்லைக் கலித்தா ழிசையே.

தூங்க லோசை நீங்கா தாகி

நாற்சீர் நிரம்பா வடியிரண் டுடைத்தாய் மேற்சீ ரோதிய வைஞ்சீர் பெற்றுச் சுரிதக மாசிரிய முரியதனி னடுத்து

வந்த தாயின் வஞ்சிப் பாவே. பாவு மினமு மேவிய வன்றி வேறுபட நடந்துங் கூறுபட வரினு மாறறி புலவ ரறிந்தனர் கொளலே.

289

19

20

21

22

23

24