உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

குடங்கை

குடங்கை யென்பது கூடலுங் காலை

யுடங்குவிரற் கூட்டி யுட்குழிப் பதுவே.

அலாபத்திரம்

அலாபத் திரமே யாயுங் காலைப்

புரைமையின் மிகுந்த சிறுவிரன் முதலா

22

வருமுறை யைந்தும் வளைந்து மறிவதுவே.

23

பிரமரம்

பிரமர மென்பது பேணுங் காலை

யநாமிகை நடுவிர லறவுறப் பொருந்தித்

தாம்வலஞ் சாயத் தகைசால் பெருவிர

லொட்டிய நடுவுட் சேரச் சிறுவிரல்

சுட்டு வளைந்துபின் றோன்றிய நிலையே.

24

தாம்பிர சூடம்

தாம்பிர சூடமே சாற்றுங் காலைப்

பேடே சுட்டுப் பெருவிர னுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிர லணிவிர லுடனதின் முடங்கி நிமிரநிற் பதுவே.

பசாசம் 3 வகை

பசாச மென்பது பாற்படக் கிளப்பி

கைநிலை முகநிலை யுகிர்நிலை யென்னத் தொகைநிலை பெற்ற மூன்றுமென மொழிப. அவைதாஞ்

சுட்டுவிர னுனியிற் பெருவிர லகப்பட

வொட்டி வளைந்த தகநிலை முகநிலை

25

யவ்விர னுனிகள் கௌவிப் பிடித்தல்

செவ்விதாகுஞ் சிறந்த வுகிர்நிலை

யுகிர்நுனை கெளவிய தொழிந்த மூன்றுந்

தகைமையி னிமிர்த்தலம் மூன்றற்குந் தகுமே.

26