உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

மாலை மணந்து காலை பிரியுங்

காதல ருடையையோ கறையிலங்கு மதியே யிரவே யாயி னல்லை பகலே

மெல்லியற் கொடிச்சி நுதலினும்

33

புல்லென் றனையா னோகோ யானே.

20

இதற்கொண் டினியான் றெளிந்து மேனாண்

மதிகோடு துஞ்சு மால்வரை வாழ்க்கைக்

கடவுள ராக வல்லது

மடவரன் மாதரை மதித்தன்று மிலமே.

21

அன்னை வாழி நெருநன் மாதர்

மென்முலை யரும்பிய வாகமு

மென்னும் பன்முறை நோக்கினள் பெரிதே.

22

பாங்கின ராகித் தீங்குதலைத் தருந

ரீங்குப் பிரிவு சூழ்ந்தனர்

யாங்கன மொழிமோ வேங்கையது நிலையே.

23

நறைகமழ் சாந்தமெஞ் சாந்தே பூவும்

பொறைமலி காந்தளம் பூவே யாடிடஞ்

சிறைவண் டார்க்குஞ் செயலையம் பொழிலே.

24

புள்ளுந் துயிற்புடை பெயர்ந்த புனலுள் வெள்ளிதழ்க் கைதை மணிக்காய் ததும்ப வந்தனள் கொல்லோ தானே

வெந்திற லண்ண னினைந்தனன் விரைந்தே.

13. கிளவி மாலை

25

இப்பெயருள்ள நூல் இருந்ததென்பது களவியற் காரிகை உரையினால் தெரிகிறது. இது வெண்பாவினால் ஆன நூல், அகப் பொருளைக் கூறுவது. இந்நூலிலிருந்து நான்கு செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் களவியற்காரிகை யுரையாசிரியர். அவற்றில் ஒன்று இப்பொழுது சிதைந்து காணப்படுகிறது. மற்ற மூன்று செய்யுள்கள் இவை:

வெள்ளிய வள்ளத்து ளேந்தும் விரைச்சுண்ணத்

துள்ளகத்தி னொண்பவளம் வைத்தாங்குத் - தெள்ளுநீர்க் கானலெல்லாம் பூக்குமே புன்னை களிவண்டு