உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இவ்வாறு செல்லரித்து அழிந்துபோன நூல்கள் இன்னும் பலப்பல. இக்கறையான்கள் இன்னும் தமது அழிவு வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அயலார் படையெடுப்பு

அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைந் திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்க ளில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. னால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள்.

தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர் செய்து அரசைக் கைப்பற்றிய காலத்தில், தமிழ் நூல் நிலையங்கள் கவனிக்கப் படாமல் மறைந்தன. விஜயநகர அரசரால் அனுப்பப் பட்டு, தமிழ் நாட்டைப் பிற்காலத்தில் அரசாண்ட நாயக்க மன்னர்கள், பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் அரசாண்டனர், அவர்கள், சமயங் களையும் சமயப் புலவர்களையும் போற்றினார்களே தவிர, தமிழ் மொழிப் புலவரைப் போற்றவில்லை; பழைய தமிழ் நூல்நிலையங் களையும் போற்றவில்லை. பாண்டிய சோழ அரசர்களின் புத்தக நிலையங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை.

பிற்காலத்தில் தஞ்சாவூரை அரசாண்ட மராட்டிய அரசர்களும் பழந்தமிழ் நூல்களைப் போற்றினார்கள் என்று கூறமுடியாது. சரஸ்வதி மகால் புத்தகசாலையில் சில தமிழ் நூல்களும் இருந்தன என்றாலும், முக்கியமான சிறந்த தமிழ் நூல்கள் அங்கு இருந்ததாகத் தெரிய வில்லை.

இலங்கையில், யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தமிழர்கள்: அவர்கள் பாண்டிய மன்னரின் தொடர்புடையவர்கள். யாழ்ப்பாணத்தில் இவ் வரசர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள்; சரஸ்வதி மகாலயம் என்னும் புத்தகசாலையையும் வைத்திருந் தார்கள். பிற் காலத்தில் சிங்கள மன்னன் இம் மன்னர்களுடன் போர் செய்தபோது,