உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வரு

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வுணர்த்துகின்றது. ‘சிற்றெட்டகம்' என்ற நூலின் பெயரைச் ‘சிற்றடக்கம்’ எனவும், ‘சிற்றட்டகம்' எனவும் பலவாறாகக் கொண்டு தமிழறிஞர் எழுதி கின்றனர். உதாரணமாக, மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் வெளியிட்டுள்ள நம்பியகப் பொருள் விளக்கவுரையில் (அகத்திணையியல், சூத்திரம் 6), ‘பத்துப்பாட்டும் கலித்தொகையும் ஐங்குறுநூறும் கீழ்க் கணக்கும் சிற்றட்டகமு முதலாகிய சான்றோர் செய்யுள்களெல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும்' எனக் காணப்படுகின்றது. இதனடிக்குறிப்பிற் 'சிற்றடக்கம்' என்பது பிரதிபேதமாகக் காட்டப் பட்டுள்ளது. களவியற் காரிகையுரை 'சிற்றெட்டகஅமம்' எனவே நூற் பெயரை யாண்டும் வழங்குகின்றது. இதுவே நூற்பெயராதல் வேண்டு மென்பது பெயரை நோக்கிய வளவானே உணர்தல் கூடும். ஐந்திணை களுள் ஒவ்வொரு திணைக்கும் எட்டுச் செய்யுள்களாக நாற்பது செய்யுள்கள் கொண்ட சிறியதொரு நூலென்று இதனைக் கோடல் தகும். மேலே காட்டிய அகப்பொருள் விளக்கத்தின் உரைவாக்கியங் கொண்டும், அந்நூலின் ஒழிபியலில் (சூத்திரம் 251) 'சிற்றட்டகத்துக் குறிஞ்சிப் பாட்டு”, 'சிற்றட்டகத்துப் பாலைப்பாட்டு' என்று வருங் குறிப்புகள் கொண்டும், இந்நூல் ஐந்திணையையுங் குறித்தவொரு முறையை மேற்கொண்டு விளங்குவதென்பது பெறப்படும். ஐங்குறு நூற்றின் அச்சுப் பிரதி யிறுதியிற் காணப்படுகின்ற 6 செய்யுள்களும் சிற்றெட்டகத்தைச் சார்ந்தவை யென்று அதன் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு முறையெனக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறனுள் ஒன்றாய் ‘எம்மூரல்ல தூர்நணித்தில்லை' என்று வருவதனைச் சிற்றெட்டகச் செய்யுளாகவே களவியற் காரிகையுரையுங் காட்டியிருப்பது கண்டு மகிழத்தக்கது. இந்நூலின் செய்யுள்கள் பல தொல்காப்பிய வுரைகளிற் பலவிடத்தும் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன.'

இது சங்க காலத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட நூல் என்பது தெரிகிறது. இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும், இளம் பூரண அடிகளும், நச்சினார்கினியரும், யாப்பருங் கலக்காரிகை உரையாசிரிய ரும், நம்பியகப்பொருள் உரையாசிரியரும், தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலின் உரையாசிரியரும் இந்நூற் செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள். இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை; நூலாசிரியர் பெயரும் தெரியவில்லை.