உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

ஐய வாழியோ வைவா யேனப்

புன்றலை மடப்பிடி புலியென வெரூஉம் பொன்மருள் வேங்கை யெம்மூர் போல ஆடவர்ப் பிரிந்தோர்க் கலைக்கும் வாடையு முளதோநின் பெருங்கன் னாட்டே.

முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னெள்வேற் கண்ணி

முலையினம் வாரா முதுக்குறைந் தனளே.

எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை

யரிய சேய பெருங்கல் லாறே.

5

9

7

இந்தச் செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். 40ஆம் சூ இளம்பூரணரும் (தொல். பொருள். அகத்திணை, 43ஆம் சூ.), இறையனாரகப்பொருளுரையாசியரும் (23ஆம் சூ.) மேற்கோள்

காட்டியுள்ளார்கள்.

கீழ்க்காணும் செய்யுள்களும் சிற்றெட்டகச் செய்யுள்களென்று

கருதப்படுகின்றன:

உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப் பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவங் காதறு கவண தேய்க்குந்

தீதுறு கள்ளியங் காடிறந் தோரே.

உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை

துகில்பொதி பவள மேய்க்கு

00

யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய்

மகில்படு கள்ளியங் காடிறந் தோரே.

9

இச்செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். சொல். 288ஆம் சூ.),

யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் (19ஆம் சூ.), யா. காரிகை

உரையாசிரியரும் (11ஆம் சூ) மேற்கோள் காட்டியுள்ளனர்.