உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

என்பது இருத்தலென்னும் உரிப்பொருள் சிற்றெட்டகத்துப் பாலைப் பாட்டினுள் வந்தது." இந்தச் செய்யுளை இளம்பூரணர் (தொல். பொருள். அகத்திணை. 42ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியுள்ளார்.

66

"சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலு

மிரவுக்குறிக் கொண்கன் வந்தனன்

விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே

15

என்பது புணர்தல் என்னும் உரிப்பொருள் வந்த சிற்றெட்டகத்து நெய்தற் பாட்டு. இச்செய்யுளை இளம்பூராண அடிகள் (தெல். பொருள். அகத்திணை. 24ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார். 19. தமிழ் முத்தரையர் கோவை

இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது, தண்டியலங்கார உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ஆகிய இருவரும் கூறுவதிலிருந்து தெரிகிறது.

தண்டியலங்காரம், பொதுவணியியல் 7ஆம் சூத்திர உரையில், அதன் உரையாசிரியர், 'கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின' என்று கூறுகிறார்.

யாப்பருங்கலம் ஒழிபியலில், அதன் விருத்தியுரைகாரர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது:

66

'குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாப்பருங்கலக் காரிகையும்போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின், ஓரடி பதினேழெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஓரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா, அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்.’

இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுளை உதாரணங் காட்டுகிறார்:

"காய்ந்துவிண் டார்நையக் காமரு

கூடலிற் கண்சிவந்த

வேந்துகண் டாயென்ன வெள்வளை

சோரக் கலைநெகிழப்