உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஆவணங்கள் : மறைந்துபோன தமிழ் நூல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் பழைய தமிழ் நூல்கள் அச்சு வடிவம் பெறத்தொடங்கியது. இந்நூல்களில் காணப்படும் பல்வேறு தகவல்கள் புதியனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். மேலும் தமிழில் உருவான நூல்கள் பல பெயரளவில் மட்டும் பதிவாகி யிருப்பதையும் காணமுடிந்தது. இவ்வகைப் பதிவுகளைக் கண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் அவற்றைத் தொகுத்து உருவாக்கியதே மறைந்துபோன தமிழ்நூல்கள் எனும் இத்தொகுதியாகும்.

யாப்பருங்கல விருத்தி உரையில் பல நூல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்நூல்கள் புழக்கத்தில் இல்லை. அதைப்போலவே யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் பல்வேறு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்கள். சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பல நூல்களைக் குறிப்படுகிறார். அவை புழக்கத்தில் இல்லை. இவ்வகையில் காணப்படும் 333 நூல்களின் பட்டியலை இந்நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.