உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

சில்செவி யன்னே பெருங்கேள்வி யன்னே

குறுங்கண் ணினனே நெடுங்காட்சி யன்னே

இளைய னாயினு மறிவின்மூத் தனனே

மகளி ரூடினும் பொய்யறி யலனே கீழோர் கீழ்மை செய்யினுந் தான்றன் வாய்மை வழுக்க மறுத்த லஞ்சி மேனெறி படரும் பேரா என்னே

ஈண்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர் பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச் சால்புமேந் தோன்றிய தாழி காதலின் மேவலன் பிறர்பிறர்க் கீந்து

தானு முண்ணும் விருந்துண்டு மிகினே.

2. தகடூர் யாத்திரை

12

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் (இவர் பெயர் தெரியவில்லை) முதலிய உரையாசிரியர் கூறுவதிலிருந்தும், புறத்திரட்டு என்னும் தொகை நூலிலிருந்தும் தெரிகிறது. இந்நூலைப் பற்றிப் பேராசிரியர் என்னும் உரையாசிரியர் கூறுவன இவை:

66.

'பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்குங் கருத்தினான் வருவன எனப்படும். என்னை? பாட்டு வருவது சிறுபான்மை யாகலின். அவை தகடூர் யாத்திரை போல்வன.' (தொல். பொருள். செய்யுளியல், “பாட்டிடை வைத்த குறிப்பினானும்” என்னும் சூத்திர உரை)

“தொன்மை என்பது உரை விராய் பழைமையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன.

(தொல். பொருள். செய்யுளியல், “தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே” என்னும் சூத்திர உரை)

இந்நூலைப் பற்றி நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறுகிறார்:

66

“இனி, யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவும் கொள்க, அஃது, அரசர்மேலும் படைத்தலைவர்மேலும்