உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்தற் கன்னாய்

கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை

மீளாது மீளான் விறல்வெய்யோன் யாதாங்கொல் வாளார் துடியார் வலம்.

கங்கை கவர்ந்தார்க்குக் கானப் பெருங்கவலை எங்கு மறவ ரிரைத்தெழுந்தார் - நுங்கிளைகள் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.

-

கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ தொடலைக் கரந்தை மறவர் கருதாதா ருள்ளத்

துரந்து நிரைமீட்ட தோள்.

22

கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையு நிரையென்னோ தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும்

23

81

11

12

13

மள்ளர் நடவா வகை.

14

காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான்

மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து

தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழும்

என்னது பட்டாயோ என்று.

24

15

யாமே பகர்ந்திட வேண்டா வினநிரை

தாமே தமரை யறிந்தனகொல் - ஏமமுற்

றன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச்

சென்றீயு மாங்கவர்பாற் சேர்ந்து. 25

விண்ணசைஇச் செல்கின்ற வேலிளைய ரார்ப்பெடுப்ப

மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம்

ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் முள்ளம்

இருபாற் படுவ தெவன்.

போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ

பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்தன் - ஊர்ப்புறத்து

நில்லாத தானை நிலனெளிப்ப நீளிடைப்

புல்லார்மேற் செல்லும் பொழுது.

16

17

18