உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற் குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல்

வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்

பாய்ந்தன மேன்மேற் பல.

35

வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச்

செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்றத கை.

39

மம்மர் விசும்பின் மதியு மதிப்பகையுந்

36

தம்மிற் றடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற்

போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக் கார்யானை யன்றடர்த்த கை.

37

வான்றோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும்

ஊன்றோய் நரியு முடன்றொக்க - மூன்றுங்

கடமா நிலநனைக்குங் கார்யானைக் கிட்ட

படமாறு நீப்பதனைப் பார்த்து. 40

38

மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற்

காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந்

தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேல் மலையுறையுந் தெய்வம்போல் வந்து.

39

வென்று களங்கொண்ட வேந்தன்றே! சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப

உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து. 41

40

கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க

எண்ணிருந்தோ ளேந்திழையாள் தான்காக்கப் - பண்ணியநூற்

சென்னியர்க் களிக்குஞ் செல்வனீ

மன்னுக நாளுமிம் மண்மிசை யானே.

4 கூடல் சங்கமத்துப் பரணி

41

சோழ அரசர்கள் மேலைச்சளுக்கிய அரசர்களுடன் பலமுறை போர்செய்தார்கள். அவ்வாறு போர்செய்த சோழ அரசர்களில் வீர