உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

5. கொப்பத்துப் பரணி

சோழ அரசன், கொப்பம் என்னும் ஊரில் சளுக்கிய அரசனுடன் போர்செய்து வென்ற வெற்றியைப் பாராட்டிக் கொப்பத்துப் பரணி இயற்றப்பட்டது. கொப்பம் என்னும் ஊர். கிருஷ்ணை ஆற்றங் கரையில் இருந்தது. முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044). மேலச் சளுக்கிய அரசனான ஆகவமல்லனுடன் கொப்பத்தில் பெரும் போர் செய்து வென்றான். இவனுடைய சேனைக்குப் படைத் தலைவனாக இருந்தவன், இவனுடைய மகனும் இளவரசனுமான இராசாதிராசன் என்பவன்.

வீரசோழியம், யாப்பதிகார உரையில், உரையாசிரியராகிய பெருந் தேவனார் மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள், சோழ அரசன் கொப்பத்துப் போரை வென்ற செய்தியைச் சிறப்பித்துக் கூறுகிறது. அந்தச் செய்யுள் இது: "துற்றுற் றின்றிவெம் போர்செய்த விற்கைப்

பன்மன்முன் போடவோர் தத்திற் றுன்றுவன் பாய்பரி யுய்த்துத் தன்மைகொண் டோடிய

வெற்றுச் செம்பியன் பார்புகழ் கொற்கைக் கண்டன்வன் பாரதம் வெற்புக் கொண்டுதிண்

போர்புரி கொப்பத் தன்றெதிர்ந் தோர்வெறு கொற்றத் தொங்கல்சிங் காசன மொற்றைச்

சங்குவெண் சாய்மரை குத்துப் பந்தர்முன் பாவிய முத்துப் பந்திமுன் றான்மகிழ்

ஒற்றைப் பெண்டிர்பண் டாரமொ டொற்றைத் தன்பெருஞ் சேனையு மிட்டிட் டன்றுடைந்

தான்வசைப் பட்டுக் கண்டவங் காரனே.

இராசேந்திரதேவர் கொப்பத்துப் போரை வென்ற செய்தியை அவருடைய சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது:

"திருமருவிய செங்கோல் வேந்தன்றன் முன்னோன் சேனை பின்னதாக இரட்டைபாடி ஏழரையிலக்கமுங் கொண்டெதிரமர் பெறாது எண்டிசை நிகழப் பறையது கறங்கின வார்த்தை கேட்டுப் பேராற்றங் கரைக் கொப்பத்து வந்தெதிர் பொருத ஆகவமல்லன் அடற்சேனை யெல்லாம் பாரது நிகழப் பசும்பிண மாக்கி ஆங்கது கண் டாகவமல்லன் அஞ்சிப் புறகிட்டோட அவன் ஆனை குதிரையும் ஒட்டக நிரையும் பெண்டிர் பண்டாரமுங் கைக் கொண்டு விஜயாபிஷேகம் பண்ணி வீர சிம்மாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு ஆறாவது.

وو