உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

"ஸ்வஸ்தி ஸ்ரீ. சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு பதினொன்றாவதி னெதிராமாண்டு: புறமலை நாட்டுப் பொன்னமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கரோம் பேர்வஞ்சி கேட்டுப் பரிசிலாக குடு(த்)த (வந்) திருவரங்குள முடையானுக்கு மறச் சக்கரவர்த்திப் பிள்ளையென்று பேருங்குடுத்து தூத்திக்குடி வயலில் வடபாகம் விளைநிலமும் இதுக்கெல்லையான புன்செய்களும் முன்பு எழுதி அணித்து குடத்த செய்யி-ன்-படி) சந்திராதித்தவரை இறையிலியே காணியாகக் குடுத்தொம்.

66

'இதுக்குப் பொன்னமராபதிப் பெருமான் திருநாமத்தும் இயல் விண்ணப்பஞ் செய்வாராகவும்.

“தான் வரி எப்பேற்பட்டனவும் இறுக்கக் கடவதல்லவாக. இப்படி சம்மதித்துக் கல் வெட்டிக் குடுத்தோம்.

"(பன்மாஹேஸ்வரர் ரக்ஷை. இதில் தூத்திக்குடியில் நன்செய் புன்செய் உள்ளவை அடங்கலும் தேவன் திருவரங்குள முடையானான மறச்சக்கரவர்த்திய பிள்ளைக்கு நன்செய் புன்செய் பாதியும் தமிழரை யருள்ளிட்ட நால்வர்க்குப் பாதியுமாக இட்டோம். அவனி நாராயண தேவரும் பொன்னமராபதி முதல்லாகிய முதலிகளோம். வடகூறு இவர்களுக்கு சந்திராதித்தவரை செல்வதாகவும். திருநாளுங் செய்விப்பார். மஹேஸ்வர ராக்ஷை.

9947

...

இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியதேவர் என்னும் பாண்டியன், கி.பி. 13-ஆவது நூற்றாண்டின் முற்பகுதியில் அரசாண்டவன்.

இந்தப் பாண்டியனுடைய படையின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர் மறமாணிக்கர் என்னும் பெயரினர் இவர்களுடைய வீரத்தையும் வெற்றியையும் கூறுவது. பேர்வஞ்சி என்னும் நூல். பேர்வஞ்சி. எனினும் பெருவஞ்சி எனினும் ஒக்கும்.

பேர்வஞ்சி பாடிய புலவருக்குத் தேவன் திருவரங்குளமுடையான் என்னும் பெயர் இருப்பதனாலும், மறச்சக்கரவர்த்திப் பிள்ளை என்னும் சிறப்புப் பெயர் சூட்டப்பட்ட படியாலும், இவர் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கருதத்தகும்.

இவர் இயற்றிய பேர்வஞ்சியைப் பற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை. இந்நூல் சரித்திரச் செய்திகள் சிலவற்றை அறிவதற்குத் துணையாயிருக்கும் இந்நூல் கிடைக்கவில்லை.