உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.

9.

10.

11.

12.

92

13.

14.

15.

16.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இளம்பூரண அடிகளும் இச்செய்யுளை மேற்கோள் காட்டி, “இஃது ஓர் வீரன் கூற்று என்று எழுதுகிறார். (தொல். புறத்திணை. “தானை

யானை” உரை.)

“கார்த்தரும்” எனத் தொடங்கும் இச்செய்யுளை, நச்சினார்க் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்திணை. 'இங்கு படையரவம்' சூத்திர உரை), "இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு (சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு) கூறியது கூறியது” என்று விளக்கம் கூறுகிறார்.

"இன்ப முடம்புகொண் டெய்துவீர்” எனத் தொடங்கும் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் (பொருள். புறத் திணை. 'மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் என்னும் சூத்திர உரை) மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், இச்செய்யுளின் கடைசி அடிக்குப் பாடபேதமும் காட்டுகிறார்: “இனி வேலிற் பெயர்ந்த மனைவி” என்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப் போக்கின மனைவி என்று பொருள் கூறுவாருமுளர்" என்று எழுதுகிறார்.

“எற்கண்டறிகோ" என்னும் தொடக்கத்துச் செய்யுளை நச்சினார்க் கினியர் மேற்கோள் காட்டி (தொல். பொருள். புறத்திணை. 'மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்’ என்னும் சூத்திர உரை). “இத் தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை” என்று விளக்கம் எழுதியுள்ளார்.

66

‘வாதுவல் வயிறே” என்னும் இச்செய்யுளை நச்சினார்க்கினியர் (தொல். பொருள். புறத்திணை. 'மாற்றருங் கூற்றஞ் சாற்றிய' பெருமையும் என்னும் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டி, "இத்தகடூர் யாத்திரை, கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய் தபவந்த தலைப் பெயனிலை" என்று விளக்கம் எழுதுகிறார்.

“இரவலர் வம்மின்" என்னும் இச் செய்யுளினை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் (தொல். பொருள். புறத்திணை. 'மாற்றருங் கூற்றம்' என்னும் சூத்திரவுரை) மேற்கோள் காட்டியுள்ளார்.

தொல். பொருள். புறத்திணை. சூத். 35இன் உரையில் நச்சினார்க் கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.

தொல். பொருள். புறத்திணை., 21இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.

தொல். பொருள். புறத்திணை., 21இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.

தொல். பொருள். புறத்திணை., 20இன் உரையில், நச்சினார்க்கினியர் இச்செய்யுளை மேற்கோள் காட்டுகிறார்.