உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை

நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை எண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற்

பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை

எச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற்

கடல்சூ ழரணம் போன்ற

உடல்சின வேந்தன் முற்றிய வூரே.

3

இந்தச் செய்யுள், தொல், புறத்திணை. 12ஆம் சூத்திரஉரையில் நச்சினார் கினியராலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

“மேலது வானத்து மூவா நகருங் கீழது நாகர் நாடும் புடையன திசைகாப் பாளர் தேயக் குறும்புங் கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் றந்த

பல்வேறு விழுநெறி யெல்லா மவ்வழிக் கண்ணுதல் வானவன் காதலி னிருந்த குன்றேந்து தடக்கை யனைத்துந் தொழிலுறத் தோலாத் துப்பிற் றாணிழல் வாழ்க்கை வலம்படு மள்ளர்க்கு வீசி யிலங்கையில்

வாடா நொச்சி வகுத்தனன்

மாலை வெண்குடை யரக்கர் கோவே.

இருபாற் சேனையும் நனிமருண்டு நோக்க

4

முடுகியற் பெருவிசை யுரவுக்கடுங் கொட்பின்

எண்டிசை மருங்கினு மெண்ணிறைந்து தோன்றிலும் ஒருதனி யனுமன் கையகன்று பரப்பிய

வன்மரந் துணிபட வேறுபல நோன்படை வழங்கி யகம்பன்றோள் படையாக வோச்சி ஆங்க,

அனும னங்கையி னழுத்தலிற் றனாது வன்றலை யுடல்புக்குக் குளிப்ப முகங்கரிந் துயிர்போகு செந்நெறி பெறாமையிற்

பொருளகத்து நின்றன நெடுஞ்சேட் பொழுதே

99

5

·