உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன நூல் வளர்ச்சி

19-ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழி அடைந்த சிறப்புகளில் முதன்மையானது வசன நூல்கள் வளர்ச்சியடைந்ததாகும். இந்த நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் வசன நூல்கள் மிகக்குறைவாகவே இருந்தன. இல்லை என்றே சொல்லலாம். தமிழ்மொழிமட்டும் அல்ல, இந்திய தேசத்தின் ஏனைய மொழிகள் எல்லாம், ஐரோப்பியரின் தொடர்பு. ஏற்பட்டபின்னரே வசன இலக்கியங்களை வளர்க்கத் தொடங்கின. நமது மொழியில் வசன நூல்கள் முற்காலத்தில் ஏற்படாததற்குக் காரணம் வாய்ப்பான எழுது கருவிகள் இல்லாததாகும். மற்றொரு காரணம் அச்சியந்திரங்கள் இல்லாததாம். பனை ஏடுகளும் இரும்பு எழுத்தாணியும் நூல்களை எழுதுவதற்கு வாய்ப்பான கருவிகள் அல்ல. ஆகவே, சுருக்கமாக எழுத்து வேலையை முடிப்ப தற்குச் செய்யுள் நடையை அக்காலத் தவர் கையாண்டனர். வாய்ப்பும் வசதியும் உள்ளஎழுதுகருவிகள் அமைந்த படியாலும், அச்சியந்திரங் கள் அதிகமாகப் பரவினபடியாலும், செய்தித்தாள்கள், வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றிய படியினாலும், லவகைப் பாடப் புத்தகங்கள் தேவைப்பட்டதனாலும் 19-ஆம் நூற்றாண்டிலே வசன நடைவளர்வதற்கு நல்லதோர் வாய்ப்பு ஏற்பட்டது.

இதற்கு முன்பு பாடசாலைகளிலுங்கூட மாணவர்களுக்கு வசன பாடங்கள் கிடையா. தரையின்மேல் மணலைப் பரப்பிப் பிள்ளைகள் எழுத்துக்களை வாயினால் சொல்லிக்கொண்டே விரலினால் எழுதப் பழகினார்கள். அதனால், திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கூச்சல் காதைத் துளைக்கும். எழுதக் கற்றுக்கொண்ட பிறகு பனைஏடுகளில் எழுத்தாணியால் எழுதப் பழகினார்கள். அக்காலத்தில் கற்பலகை களும் எழுது குச்சிகளும், காகிதம் பேனா மை பென்ஸில் முதலியன வும் கிடையா. வகுப்புக்களுக்கு ஏற்றபடி வசன பாடப்புத்தகங்கள் இல்லாதபடியால், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலிய செய்யுள் நூல்களையே சிறுவர்கள் பொருள் விளங்காமல்