உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1865 திருச்சபைப் பத்திரிகை: கிறிஸ்து சமயப் பத்திரிகை. எஸ். சாமிவேல் பிள்ளை இதை நடத்தினார். இவராலேயே கற்பக விருட்சம் என்னும் பத்திரிகையும் சென்னையில் நடத்தப் பட்டது.

1867 தேசாபிமானி: கிறிஸ்துவப் பத்திரிகை. சென்னையிலிருந்து வெளியாயிற்று 1877-இலும் இதுவந்தது.

1870 Native Public Opinion: திவான் பகதூர் ரகுநாத முதலியார். அரங்கநாத முதலியார், வேங்கடரமண பந்துலு ஆகிய இவர்களால் நடத்தப்பட்டது. சென்னை பாஸ்டர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் எழுதப்பட்டன. பிற்காலத்தில் இது ஆங்கிலத்தில் மட்டும் வெளியாயிற்று.

1871

ஞானாபானு: இதன் விபரம் தெரியவில்லை.

1871 பிரம தீபிகை: சைதாபுரம் காசி விசுவநாத முதலியாரும், பாரிஸ்டர் ராமசாமி ராஜுவும் இதனைச் சென்னையில் நடத்தினார்கள். முதலியார் இறந்த பிறகு இது நிறுத்தப்பட்டது. 1874 ஜனவினோதனி: திங்கள் இதழ். சென்னையில், C. K. S. அச்சியந்திர சாலையில் M. S. B. and V. K. சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. அரசாங்க ஆதரவு பெற்றது. 1889 வரையில் நடந்ததாகத் தெரிகிறது.

1875 சிநேக போதன்: கிறிஸ்துவப் பத்திரிகை. திங்கள் இதழ். பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்தது.

1876 ஞானபானு: திங்கள் இதழ். வர்த்தமான தரங்கினி அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டது. செங்கல்வராய முதலியார் இதன் ஆசிரியராக இருந்தார்.

1877 சித்தாந்த சங்கிரகம்: சட்ட சம்பந்தமான திங்கள் இதழ். சி. இராமராவ் இதன் ஆசிரியர். 1878 இலும் நடந்தது.

1879 தத்துவ விசாரிணி: இதைப்பற்றி ஒரு செய்தியும் தெரிய

வில்லை.