உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

127

கடினமாக இருந்தது. ஆகவே, அவர்களுக்கு வசன நடையில் அமைந்த இலக்கண நூல் தேவைப்பட்டது. ஆகவே, அக்காலத்து ஆங்கிலக் கிழக்கிந்திய அரசாங்கத்தார் தமிழில் வசன நடையில் இலக்கண நூல் எழுதுகிறவர்களுக்கு ஒரு தொகை ரூபா பரிசு அளிப்பதாக விளம்பரம் செய்தார்கள். இதன் காரணமாக முதன் முதல் தமிழில் வசன இலக்கண நூல் தோன்றியது.

அந்தப் பரிசுபெற்று வெளியிடப்பட்ட முதல் வசன இலக்கண நூல் தமிழ் விளக்கம் என்னும் பெயர் பெற்றிருந்தது. அந்நூல் 1811-ஆம் ஆண்டில், திருவேற்காடு சுப்பராய முதலியாரால் எழுதப் பட்டு அச்சிடப்பட்டது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட அந்த இலக்கண நூலின் பிரதியொன்றை, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சிதலமான நிலையில் நான் பார்த்தேன். அந்நூலின் பிரதி இப்போது எங்கேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அந்த நூலில் முகப்புப்பக்கத்தின் அமைப்பை இந்நூல் 130, 131-ஆம் பக்கத்தில் காட்டியுள்ளேன்.

இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1817-ஆம் ஆண்டு அச்சிடப் பட்டது. இதன் பிறகு வசன நடையில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல், தாண்டவராய முதலியார் எழுதிய இலக்கண வினாவிடையாகும். சென்னைக் கல்விச்சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார். அக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த ரிச்சார்டு கிளார்க்கு துரையவர்கள் விரும்பியபடி இந்த இலக்கண வினாவிடையை எழுதினார். இது 1820-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இதன் முகப்புப் பக்கத்தைப் படத்தில் காண்க.

அரசாங்க அலுவலில் இருந்த ஆங்கிலேயர் அல்லாமல் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் வந்திருந்த ஐரோப்பிய கிறித்துவப் பாதிரிமாரும் தமிழ்படிக்கத் தொடங்கினார்கள் அன்றியும். தமிழ்க் கிறித்துவப் பிள்ளைகள் படிப்பதற்காகப் பாடசாலைகளை அமைத்தார்கள். அரசாங்கத்தாரும் சென்ற நூற்றாண்டில் உயர்தரப் பாடாசாலைகளையும் கல்லூரிகளையும் அமைத்தார்கள். ஆகவே மாணவர்களுக்காகவும் வசன இலக்கண நூல்கள் தேவைப்பட்டன. சென்ற 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த வசன இலக்கண நூல்களின் பட்டியலையும், ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிடப்பட்ட பழைய இலக்கண நூல்களின்