உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

167

தாம்சன் கிளார்க்கு, ராஜஸ், துருஐயர், போப்ஐயர், இரோனியூ சையர் முதலிய ஐரோப்பியர்களும் இவரிடம் தமிழ் பயின்றார்கள்.

1847-ஆம் ஆண்டில் கவிராயர் அவர்கள் நன்னூலுக்குக் காண்டிகை உரை எழுதி அச்சிட்டார். அவ்வுரை இவருடைய ஐரோப்பிய மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி எழுதப் பட்டது. இதனை அவ்வுரைச் சிறப்புப்பாயிரத்தில் கூறுகிறார்:

66

'இல்லையாந் தன்னிகர் எனவுல கேதுறூஉம்

முல்லையாந் துருவெனும்3 ஒளிகொள் போதகனும் ஏமசன் மார்க்கத் தியனிலை வாழாஅத்

3

தாமசன் கிளார்க் கெனுந் தகைப்புர வலனுந்

துராசையி னீங்கித் தொன்னெறி வழாஅ

3

விராச ஸெனும்3 பெய ரியற்கோ மகனும் இந்நூற் குரையீங் ஙனமியற் றுகவென நன்னூற் குரைசெய நாடினன்

என்று கூறுகிறார்.

இவருடைய நன்னூல் விருத்தியுரைக்குச் சாத்துக்கவி கொடுத் தவர் தொல்காப்பியம் வரதப்ப முதலியார், அஷ்டாவதானம் வீராசாமிக் கவிராயர், களத்தூர் வேதகிரிப் புலவர், சேமங்கலம் தமிழ்ப்புலமை நாராயண உபாத்தியார், சத்திய வெட்டி தமிழ்ப் புலமை சென்ன கேசவ உபாத்தியார் ஆகியோர்.

இவருடைய நன்னூல் விருத்தியுரையில், நன்னூல். சூத்திரம் ஒன்றை மாற்றி எழுதி விட்டார்.

"தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்டு

எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி

என்னும் சூத்திரத்தை மாற்றி.

66

'தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்டு எய்தும் ஏகாரம் ஒகாரம் மெய் புள்ளி”

என்று அமைத்துவிட்டார்.

இதற்கு விளக்கம் எழுதும்போது, பழைய சூத்திரப்படி எழுத்துக் கள் இக்காலத்தில் எழுதப்படவில்லை என்றும் ஆகையால் சூத்திரம் மாற்றி அமைக்கப்பட்டது என்றும் விளக்கியுள்ளார்.4