உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

173

வெண்பா மாலை) இதனை 1835-இல் பதிப்பித்தார். சூடாமணி நிகண்டு, முதல் பத்துப் பகுதிகளை அச்சிட்டார். சேந்தன் திவாகரம் முதல் எட்டுப் பகுதிகளை அச்சிட்டார்.

முத்துராமலிங்க சேதுபதி (?-1873)

இவர் இராமநாதபுரத்தில் 1847-இல் அரசப் பதவியை ஏற்றார். இவர் பொன்னுச்சாமித் தேவரின் தம்பியார். தமிழை நன்கு கற்றவர். செய்யுள் இயற்றவல்லவர். துவாத்ரீம் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் முதலியோர் இவருடைய அவைப் புலவராக இருந்தனர். மாம்பழக்கவிச்சிங்கம் முதலிய புலவர்களை ஆதரித்தார். இவர் இயற்றிய நூல்கள்: காயகப்பிரியா, சடாக்கர சாரப்பதிகம், சரசசல்லாபமாலை, நீதிபோதம், பாலபோதம், பிரபாகரமாலை, முருக ரனுபூதி, வள்ளிமண மாலை. இவர் இயற்றிய முந்நூறு தனிப்பாடல்கள் தனிச் செய்யுட் சிந்தாமணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சைமன் காசிச் செட்டியார் (1807-1861)

யாழ்ப்பாணம் இவருடைய ஊர். கிறிஸ்தவர். இந்து-கிறிஸ்துவத் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து ஒரு சிறு நூலை ஆங்கிலத்தில் எழுதி Tamil Plutarch என்னும் பெயரினால் 1859-இல் வெளியிட்டார்.

கந்தசாமிக் கவிராயர் (?-1871)

இவர் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்தவர். உடையார் பாளைய ஜமீன்தார் கச்சிரங்கப்ப உடையார் (1801-1835) மீது கோவைப் பிரபந்த நூல் பாடினார். அதற்காகப் பத்துக்காணி நிலத்தையும் பரிசுகளையும் பெற்றார்.

6

உயின்பிரிட் ஐயர் (1810-1879)

திருநெல்வேலியைச் சேர்ந்த வாழையடி என்னும் ஊரில் பிறந்த தமிழர். தமிழ் ஆங்கிலம். இலத்தீன். கிரேக்கம், எபிரேயம் என்னும் மொழிகளைக் கற்றவர், கனம் இரேனியூசையர் இவரைப் படிக்க வைத்தார். 1827-முதல் சென்னையிலும், 1830-இல் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சாஸ்திரப் பள்ளியிலும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பாளையங்கோட்டை வித்தியா சாலையில் ஆசிரியராக அமர்ந்தார். 1845-இல் மதுரையில் வேதசாஸ்திரப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1855-இல் முழு குருப்பட்டம் பெற்றுக் கிறிஸ்துவ குருக்கள் வரிசையில் சேர்க்கப்பட்டார்.