உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

175

இவர் இயற்றிய நூல்கள். காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், காந்திமதியம்மை கலித்துறையந்தாதி, சங்கரநாயனார் கோயில் அந்தாதி, ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோதையந்தாதி, அநவரத தானநாதர் பதிகம், காந்தி மதியம்மை பதிகம், நெல்லைநாயக மாலை, சிங்காரப்பதம். பதசாகித்தியங்கள்.

அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (?–1836)

சென்னையைச் சார்ந்த புரசைப்பாக்கத்தில் இருந்தவர். புரசையில் பள்ளிக்கூடம் நடத்திய புதுவை அச்சுத உபாத்தியா யரிடத்திலும், பிறகு சென்னைக் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமை நடத்திய தாண்டவராய முதலியாரிடத்திலும், மழவை மகாலிங்கையரி டத்திலும் தமிழ் கற்றார். மற்றும் இயற்றமிழாசிரியர் விசாகப் பெருமாளையர், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், புதுவை நயனப்ப முதலியார் இவர்களிடத்திலும் தமிழ் பயின்றார்.

வண்ணப்பாக்களை விரைவாகப் பாடவல்லவர் இவர். பல புராணங்களையும், பிரபந்த நூல்களையும், உரை நூல்களையும் இயற்றியுள்ளார். அஷ்டாவதானம் செய்வதில் வல்லவர். சென்னைப் புரசை கங்காதரேசுவரர் கோயில், மயிலாப்பூர் செங்கற்பட்டு புதுச்சேரி திரிசிரபுரம், மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம், திருப்போரூர், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவர் கோவில் முதலிய இடங்களில் அஷ்டாவதானம் செய்து புகழ்பெற்றவர்.

இவர் தாம் இயற்றிய திருப்போரூர்ப் புராணத்தைத் திருப் போரூர் முருகன் கோவிலில், காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் தலைமையில் அரங்கேற்றினார். திருப்புகழ் சுவாமிகள் என்றும் முருகதாச சுவாமிகள் என்றும் பெயர் பெற்ற தண்டபாணி சுவாமிகள், தாம் இயற்றிய நூல்களைச் சென்னையில் அரங்கேற்றிய போது, அந்தச் சபைக்கு அஷ்டாவதானம் சபாபதி முதலியார் தலைமை தாங்கினார்.

இவர் இயற்றிய நூல்கள்: திருப்போரூர் முருகன் மீது குறவஞ்சி, கலம்பகம், அலங்காரப்பஞ்சகம், யமகவந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, வெண்பாமாலை, நான்மணிமாலை, திரிபந்தாதி, இருசொல்யம கவந்தாதி, சதகம் முதலிய நூல்களை இயற்றினார். பிறவாசல சதகம், பிறவாசல வெண்பாமாலை, புரசைப் பதிற்றுப்பத் தந்தாதி, மேற்படி வெண்பா மாலை, மேற்படி இரட்டைச் சொல்யமக மாலை, சிதம்பர

"