உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

தொகுக்கப்பட்டு 'திருவருட்பா' என்னும் பெயருடன் அச்சிற் பதிக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களை முதல் முதல் தொகுத்து வெளியிட்டவர். இவரது சீடரான தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள். திருவருட்பா வெளியானவுடன் அருட்பா, மருட்பா கட்சிகள் தோன்றி வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.

அழகிய சொக்கநாதப் பிள்ளை (?-1885)

இவர் திருநெல்வேலிக்கு அடுத்த தச்சநல்லூரில் பிறந்தவர். தமது தந்தையாராகிய வன்னியப்பப்பிள்ளையிடம் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: அநவரத தான நாதர் பதிகம் காந்திமதி யம்மை பிள்ளைத் தமிழ், காந்திமதி யம்மை பதிகம், சங்கரநயினார் கோயில் அந்தாதி, நெல்லைநாயக மாலை, முத்துசாமி பிள்ளை காதற் பிரபந்தம், ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவையந்தாதி, பதசா கித்யங்கள்.

கனகசபைப் புலவர் (1826-1873)

யாழ்ப்பாணத்து அளவெட்டி என்னும் ஊரிற் பிறந்தவர், பேர்போன வட்டுக்கோட்டை சாஸ்திரக் கலா சாலையில் கல்வி பயின்றார். உவாட் என்னும் ஐரோப்பியரிடம் மேல்நாட்டு வைத்தியமும், தமது தந்தையர்ராகிய வேலுபிள்ளையிடம் ஆயுர்வேத வைத்தியமும் கற்றார். செய்யுள் இயற்றவும் கற்றவர். ஆகவே புலவன், கனகசபை என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்து சமயத்தவர்.

கண்டி அரசன் மகனான அழகர்சாமி என்பவர் பேரில் ‘அழகர் சாமி மடல்' என்னும் பிரபந்தம் பாடி அவர் இருந்த வேலூருக்குப் போய், அவர் முன்னிலையில் அரங்கேற்றினார். திருவாக்குப் புராணம் என்னும் நூலை இயற்றினார். இது 1751 விருத்தப்பாக்களை யுடையது. நிகண்டு ஒன்றையும் உலாநூல் ஒன்றையும் இயற்றினார் என்பர். இவர் சென்னையில் அகராதி எழுதும் அலுவலில் வீராசாமி செட்டியாருடன் தொண்டு செய்தார்.

வேதநாயகம் பிள்ளை (1826-1889)

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குளத்தூர் இவரூர். கிறித்தவர். திருச்சி ஜில்லாக் கோர்ட்டில் அலுவல் செய்தார். பிறகு, சீர்காழி, மாயூரம் முதலிய இடங்களில் முன்சீபு உத்தியோகம் செய்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடத்தில் தமிழ்க் கல்வியும் தியாகப்பிள்ளை