உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

193

ஆ ண்டிலும், சூடாமணி நிகண்டை 1875-ஆம் ஆண்டிலும் அச்சிட்டார்.

சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் எழுதிய சைவ மகத்துவம்' என்னும் நூலுக்கு மறுப்பாகக் கிறிஸ்தவராகிய அருளம்பல முதலியார் எழுதிய ‘சைவ மகத்துவ திக்காரம்' என்னும் நூலுக்கு மறுப்பாக இவர், சைவ மகத்துவதிக்கார நிக்கிரகம்' என்னும் நூலை எழுதினார். சாமுவேல் பவுல் ஐயர் (1844-1900)

கிறிஸ்தவ சமயத்தவர். சில காலம் உபாத்தியாயராகவும் சில காலம் மதபோதகராகவும் இருந்தார். கிறிஸ்து மதச் சார்பாகத் துண்டுப் பிரசுரங்களையும் சிறு நூல்களையும் எழுதி அச்சிட்டார். 1874-ஆம் ஆண்டில் டீக்கன் பட்டம் பெற்றார். 1890-ஆம் ஆண்டு முதல் 'நற்போதகம்' என்னும் பத்திரிகையை நடத்தினார். ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம்' என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து 1882-ஆம் ஆண்டில் அச்சியற்றினார்.

சபாபதி நாவலர் (1844-1903)

யாழ்ப்பாணத்துக் கோப்பாய் இவ்ரூர். வடகோவை ஜகநாதையர் நீர்வேலி சங்கர பண்டிதர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை முதலியவர்களிடம் கல்வி பயின்றார். ஆங்கிலமும் கற்றவர். சென்னபட்டினத்தில் நீண்ட காலம் வசித்திருந்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் நாவலர் பட்டமும், மதுரைத் திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் மகாவித்துவான் பட்டமும் பெற்றவர். பாஸ்கர சேதுபதி மன்னரால் நன்கு மதிக்கப்பட்டவர். சென்னையில் சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை என்னும் அச்சியந்திர சாலையை நிறுவி, 'ஞானாமிர்தம்’ என்னும் பத்திரிகையை நடத்தினார். சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபரான பொன்னம்பலம் பிள்ளை, சுவாமிநாத பண்டிதர், சிவப்பிரகாசப் பண்டிதர், சங்கர பண்டிதர், ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை முதலியவர்களின் நண்பர்.

ச.

இவர் இயற்றிய நூல்கள்: சதுர்வேத தாத்பரிய சங்கிரம் (1876), பாரததாத்பரிய சங்கிரகம், இராமாயண தாத்பரிய சங்கிரகம் (1884),